சூடானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டின் தலைநகர் கார்ட்டோம் வீதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர். வார இறுதியில் பெருந்திரள் கூட்டங்கள் எதுவும் கூடாது என்று அரசு ஆணையிட்டிருந்த நிலையிலும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டனர். அக்டோபர் 25, 2021 முதல் ராணுவ ஆட்சி சூடானில் நடந்து வருகிறது. தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களாட்சி மீண்டும் கொண்டு வரக்கோரி மக்கள் போராடி வருகிறார்கள்.
2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் நீரிழிவு நோய் பாதிப்பால் இறந்திருக்கி றார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் நோய் வராமல் பாதுகாப்பது ஆகிய பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று வல்லுநர்கள் குழு அமெரிக்க நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைத் துள்ளது. 2020 ஆம் ஆண்டில் சுமார் 87 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி ருவாண்டாவில் நடைபெறும் என்று ருவாண்டாவின் ஜனாதிபதியும் பால் ககாமே மற்றும் காமன்வெல்த் பொதுச் செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருந்த கூட்டம் கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப்பிறகு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் காமன்வெல்த் கூட்டம் நடக்கவிருக்கிறது.