tamilnadu

இன்று பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா

இன்று பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா

நியூயார்க், ஜூலை14- சர்வதேச விண்வெளிநிலை யத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடு பட்டிருந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பூமி திரும்புகின்றனர். விண்வெளி வீரர்கள் பயணிக்கும் டிராகன் விண்கலன் ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி 4.45க்கு (திட்டமிட்டதை விட 10 நிமிட தாமதம் ) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபட்டு பூமிக்கு திரும்பும் பயணத்தை துவங்கியது. இரண்டு வாரங்கள் பல முக்கிய ஆராய்ச்சிக்குப் பிறகு அக்குழு, டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பும் பயணத்தை துவங்கி யுள்ளது. சுமார் 22-24 மணி நேர பயணத்திற்கு பின் செவ்வாயன்று (ஜூலை 15) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கடலில் விண்கலன் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.