tamilnadu

img

தங்கம் வென்ற தமிழக மகளிர் அணியினருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., துணைமேயர் வாழ்த்து

மதுரை, ஜன. 4-  தேசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற தமிழக  மகளிர் அணியினருக்கு சு.வெங்க டேசன் எம்.பி., துணை மேயர் தி.நாக ராஜன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேசிய அளவிலான ஸ்கேட்டிங் இன்லைன் ஹாக்கி போட்டி டிசம்பர் 11 முதல் 14 ஆம் தேதி வரை சண்டி கரில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு சார்பாக  மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் ஸ்கேட்டிங் அகாடமி மாணவ -மாணவி கள் ந.ஸஞ்சனா, ச.ஸ்ரீஜா, அ.தக்சிதா,  தன்யா, சுதிக்சா, சந்தீப், விபீஸ்வரன் சித்தார்த், அகிலன், அனிருத், நீரஜ்குமார், சந்தோஷ், தர்ஷன், ஸ்ரீகிரு ஷ்ணா, முத்தலிப், வீரமணிகண்டன், தனிஷ்கா, மஹிமிதா, நவநீதா, தமிழ்கவி ஆகியோர் 11 வயதிற்கு உட்பட்ட மற்றும் 14 வயதிற்குட்பட்ட பிரிவு போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவிகள் முதல் முறையாக தங்கப் பதக்கத்தையும் மாணவர்கள் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர். கடந்த 3 வருடங்களாக இந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கம் வென்று வருகின்றனர் என்று  பயிற்சியாளர் வெங்கடேசன் கூறினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகள் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி துணை மேயர் தி. நாக ராஜன் ஆகியோரை  நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.  இந்நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், எஸ். கண்ணன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாவட்டச் செயலாளர் மா.  கணேசன் ஆகியோரும்  மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.