கல்விக் கட்டண உயர்வு மதுரையில் மாணவர்கள் காத்திருப்புப் போராட்டம்
மதுரை, ஆக.12 – மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் கல்விக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்க மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் செவ்வாயன்று கல்லூரி முன்பு 24 மணிநேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்டத் தலைவர் டீலன் ஜெஸ்டின் கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சமூக அறிவியல் கல்லூரியில் இந்த கட்டண உயர்வால் ஏழை, எளிய மாணவர் களையும், பகுதி நேர வேலை செய்து படிக்கும் மாணவர்களையும் கடுமை யாக பாதித்துள்ளது. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி தொழிலாளர்கள் என்பதால், குடும்பங் களும் பொருளாதார சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும், கல்லூரி வளாகம் மாணவர் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. அரசு உதவி பெறும் இக்கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து உயர் கல்வித்துறை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதேபோல் தமிழக முதல்வரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடிதமும் அனுப்பியுள்ளோம். மேலும் தமிழக முதல்வர் மதுரை வந்தபோது அவரை நேரில் சந்தித்தும் மனுக்கள் அளித்தோம். இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாண வர்களிடையே கட்டண கொள்ளை யில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கல்லூரி யில் போதுமான சுகாதாரம் இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் செவ்வாய் காலை 10 மணி முதல் புதன் காலை 10 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி கிளைச் செயலாளர் ரேகன் சுமன் மற்றும் கிளை துணைத் தலைவர் சக்தி வேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின், மாநில இணைச் செயலாளர் பிருந்தா, மாநகர் துணைச் செயலாளர் தீபலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கௌரி உள்ளிட்டு கலந்து கொண்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.வேல்தேவா, மாவட்ட நிர்வாகி ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.