ஆணவப்படுகொலையை கண்டித்து மாணவர்கள், வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்ய முயன்ற வைரமுத்து, ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இத்தகைய படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் புதனன்று (செப்.18) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் தோழர் வைரமுத்து சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் விஜய், மாவட்டச் செயலாளர் ஜி.நித்யராஜ், பகுதி தலைவர் ஷாஜகான், செயலாளர் கோபி, பொருளாளர் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.