இஸ்ரேலை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மதுரை, அக்.10- பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனவெறி தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் அவனியாபுரம் மந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் சுதர்சன் துவக்கி வைத்து பேசினார்வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் எஸ்.பாலா உரையாற்றினார். வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.கருப்பசாமி, மாவட்ட செயலாளர் பி.தமிழ ரசன், மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் விக்னேஷ்வரி, மாவட்டக்குழு உறுப்பினர் திருச்செல் வம் ஆகியோர் பேசினர். பாலஸ்தீனத்தில் இனப்படு கொலையால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
                                    