சமத்துவ விதிமுறைகள் மீதான உச்சநீதிமன்றத்தின் தடைக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
புதுதில்லி உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் கை யாள்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) “உயர் கல்வி நிறுவனங்களில் சமத்து வத்தை மேம்படுத்துதல் விதிமுறை கள், 2026” என்ற பெயரில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டது. ஆனால் இந்த விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் திடீரென இடைக்காலத் தடை விதித்தது. இதைக் கண் டித்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தில்லி - சமத்துவப் பேரணி உச்சநீதிமன்றத்தின் தடையை எதிர்த்து பிப்., 3ஆம் தேதி, தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பிரிவுக்கு வெளியே “சமத்து வப் பேரணி” என்ற பெயரில் பேரணி யுடன் போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமை ப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக் கான மாணவர்கள் திரண்டு உச்சநீதி மன்றம் தடையை எதிர்த்தும் “யுஜிசி விதிமுறைகளை உடனே அமல் படுத்து”; ஜெய் பீம்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக போராட்டத்தின் போது பேச்சளர்கள்,உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படை யிலான பாகுபாடு பிரச்சனைகளில் கல்வி நிறுவனங்களைப் பொறு ப்புக் கூற (பதில் சொல்ல வேண்டிய கடமை) வைக்கவும், அன்றாட அவ மதிப்பு, புறக்கணிப்பை எதிர்கொள் ளும் ஒடுக்கப்பட்ட சமூக மாண வர்களைப் பாதுகாக்கவும் எடுக் கப்பட்ட மிகவும் அவசியமான யுஜிசி எடுத்த முயற்சியை உச்சநீதி மன்றம் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெளிவுபடுத்தினர். இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை போராட்டத்துக்கு இடையே இந் திய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் ஆய்ஷே கோஷ், ”யுஜிசி-யின் சமத்துவ விதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தடை யை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; விதிமுறைகளை வலுப் படுத்தி முழுமையான “ரோஹித் சட்டமாக” மாற்ற வேண்டும் ; சமத் துவ விசாரணைக் குழுக்கள் நிறு வனங்களால் நியமிக்கப்படாமல், தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ; மேலும் விசாரணைக் குழுக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாண வர் பிரதிநிதிகளின் பெரும்பான்மை யை உறுதி செய்ய வேண்டும்; ஐஐடி மற்றும் ஐஐஎம் உட்பட ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திற்கும் இதைப் விரிவுபடுத்த வேண்டும்; பாகுபாட்டிற்கு எதிரான நடவ டிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சியை யும் நிறுத்தத் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவோம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார். நீதித்துறையில் சாதியவாதம் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் முன் னாள் தலைவர் நிதீஷ் குமார் போராட்டத்தின் போது பேசுகை யில்,”இந்த விதிமுறைகள் பல ஆண்டுகால தியாகத்திற்குப் பிறகு கிடைத்த கடினமான வெற்றி ஆகும். இவை சலுகைகளாக வழங்கப்பட வில்லை. வீதிகளிலும், நீதிமன்றங்க ளிலும் நடந்த ரத்தம், வியர்வை மற்றும் இடைவிடாத போராட்டங்க ளின் மூலம் வந்தவை. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை யானது, நாட்டின் முக்கிய அமைப்பு களில் (நீதித்துறை) கூட சாதிய வாதம் இன்னும் ஆழமாக வேரூன்றி இருப்பதையே நிரூபிக்கி றது. வெற்று வாக்குறுதிகளுக்குப் பதிலாக உண்மையான சமத்துவம் வரும் வரை மாணவர்கள் தொட ர்ந்து போராடுவார்கள். யுஜிசி வரைவு விதிமுறைகளில் குறை பாடுகள் உள்ளன. ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற உயர்தர நிறுவ னங்களுக்கு வரைவு விதிமுறைக ளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டி ருப்பது, சாதிப் பாகுபாடு குறித்த தெளிவான வரையறை இல்லா ததை குறிக்கிறது” என அவர் குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் பரவும் போராட்டங்கள் உச்சநீதிமன்ற தடைக்கு எதி ராக தில்லியில் மட்டுமின்றி, மாண வர் அமைப்புகளால் நாடு முழு வதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தில்லியில் நடை பெற்றது போல பிப்., 2 அன்று, பீகார் மாநிலம் பாட்னாவில் யுஜிசி சமத்துவ விதிமுறைகளை ஆத ரித்து மாபெரும் பேரணி நடைபெற் றது. ஆனால் ஜேபி கோலம்பர் அருகே பீகார் பாஜக கூட்டணி அர சின் காவல்துறை மாணவர்களை தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. அதே போல, தெலுங்கானா மாநி லம் ஹைதராபாத்திலும் மாணவர் கள் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் நாடு முழுவதும் கல்வி, பல்கலைக்கழக வளாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக நீதியில் உறு தியுடன் இருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் இனி தாமதம் செய் யக்கூடாது என்பதில் ஒற்றுமையாக வும் உள்ளனர். இதனால் போராட் டம் தீவிரமடையும் என எதிர்பார்க் கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜக தவறான பிரச்சாரம் உச்சநீதிமன்ற தடைக்கு ஆதர வாக ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் யுஜிசி சமத்துவ விதிகள் தவ றாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கூற்றின் மூலம், பொய் பிரச்சா ரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜிதேந்திர மீனா இதை முற்றாக நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ”யுஜிசி சமத்துவ விதிகள் தவ றாகப் பயன்படுத்தப்படும் என்ற பயம் பாதுகாப்பைத் தடுக்க முடி யும் என்றால், வரதட்சணை அல்லது பிற குற்றங்களுக்கு எதிரான சட் டங்களும் முடங்கிவிடும். ஒவ் வொரு சட்டமும் திரிக்கப்படலாம், ஆனால் அது அன்றாடம் அவ திப்படுபவர்களுக்கு உண்மை யான பாதுகாப்பை மறுப்பதற்கான சாக்கு போக்காக இருக்க முடி யாது” என அவர் கூறினார்.
