பளுதூக்கும் போட்டி மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவி ஹேமாஸ்ரீ
சிவகங்கை, அக்.5- சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அருகே மொச்சி யேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் ஹேமாஸ்ரீ, மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி யில் மூன்றாம் இடம் பெற்று சிறப்புப் பெற்றுள்ளார். ஹேமாஸ்ரீ தற்போது ஈரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரு கிறார். மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டி யில் பங்கேற்று சிறப்பான திறமையுடன் செயல்பட்டு மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அவரது சாதனையை பாராட்டி, தமிழக அரசு ரூ.50,000 பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது. மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஹேமாஸ்ரீயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர் அழகர்சாமி, ராஜு, ஒன்றியச் செயலாளர் சந்தியாகு ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டினர்.
