tamilnadu

img

லட்சத்தீவில் மாணவர் போராடத் தடை

மட்டஞ்சேரி, ஜுன் 23-   லட்சத்தீவில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் போராட்டம் நடத்த தடை விதித்து கல்வி இயக்குனர் ராகேஷ் டாமியா உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் எதிர்ப்புகள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இதுபோன்ற பிற நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று  அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது மாணவர்க ளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்ப தற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மினிகாய் தீவில் இன்ஜினியரிங், டிப்ளமோ கல்லூரிகளில் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வளாகங்களில் புகுந்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். மற்ற தீவுகளுக்கும் பரவிய போராட்டத்தை அடக்கவே இந்த நடவடிக்கை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.  மாணவர் அமைப்புகள் கூட்டங்களை கூட்டவும் இந்த உத்தரவில் தடை விதிக் கப்பட்டுள்ளது. பள்ளி-கல்லூரி வளாகங்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வித மாகவோ எந்தவொரு பிரச்சனையிலும் தங்கள் எதிர்ப்புகளையோ அல்லது கருத்து வேறுபாடுகளையோ வெளிப்படுத்தவோ அல்லது அவர்களின் உரிமைகளுக்காக போராடவோ கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது.

சலுகைகள் மறுப்பு, நீக்கம்

இந்த உத்தரவை மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள் ளனர். உத்தரவை மீறுபவர்களுக்கு, லட்சத்தீவில் மாணவர்களுக்கு வழங்கப் படும் அனைத்து கல்விச் சலுகைகளும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறுக்கப்படும். உத்தரவை மீறும் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து நிரந்தரமாக அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு வெளியேற்றப்படுவார்கள். 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மீது அபரா தம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. தற்போது 10 தீவுகளில் 68 கல்வி நிறுவனங்கள் உள்ளன. நர்சரி 16, பிரைமரி-21, அப்பர் பிரைமரி 10, மேல்நிலைப் பள்ளி-3, சீனியர் செகண்டரி 10, சிபிஎஸ்இ பள்ளிகள் 5, இன்ஜினியரிங் டிப்ளமோ கல்லூரி-1 மற்றும் கலை கல்லூரிகள் 2 உள்ளன. இவற்றில் படிக்கும் 9,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.