tamilnadu

கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

சேர்க்கைக்குழு எச்சரிக்கை

சேர்க்கைக்குழு எச்சரிக்கை சென்னை, செப். 24 - தமிழ்நாட்டில் உள்ள தனியார்  மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூ லித்தால் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என மருத்துவக் கல்வி மாண வர் சேர்க்கைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025-2026 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று மாண வர்கள் சேர்க்கை நடந்தது. வகுப்பு கள் செப்டம்பர் 22 முதல் துவங்கி யுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கல்விக் கட்டணக்குழு நிர்ணயம் செய்த கட்டணத்தின் விபரம் மாணவர் சேர்க்கைக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள் கல்லூரியில் சேரச் செல்லும்போது நிர்ணயிக்கப்பட்ட கட்ட ணத்தைவிட கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நிர்ப்பந்திப்பதாக புகார்கள் எழுந்தன.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை  விடுத்திருந்தார். அதில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையாக அனைத்து தனி யார் மருத்துவக் கல்லூரி முதல்வர் களுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.  அதில், கூடுதல் கட்டணம் வசூலித்தால், கல்லூரியின் அங்கீ காரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.