கடையநல்லூரில் தெரு நாய்கள் தொல்லை : 2 நாட்களில் 35 பேர் பாதிப்பு
கடையநல்லூர், அக். 9- தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சியான கடையநல்லூர் நகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்காததால் கடையநல்லூர் நகரப் பகுதி முழுவதும் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் நாய் கடியால் 35 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
