tamilnadu

img

மாநில அளவிலான கராத்தே போட்டி மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ்  அகாடமி மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை, செப். 14 -  மாநில அளவிலான கராத்தே போட்டியில், மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ-மாணவிகள் 15 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர். மாநில அளவிலான கராத்தே போட்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், செப்.7 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சார்ந்த சாய் ரக்சன் 2 தங்கம், தீக்சன் 2 தங்கம், சமிஷ்கா 1 தங்கம், அவ்ஷிகா 1 தங்கம், தியாலக்ஷ்மி 1 தங்கம், 1 வெள்ளி, ஸ்ரீ நிரஞ்சன் 1 தங்கம், 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி, லிங் கேஸ்வரன் 1 வெள்ளி, 1 வெண் கலம், மதன் கார்த்திக் 1 வெள்ளி, 1  வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங் களை வென்று மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ-மாணவி களையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன், அணி  மேலாளர் ஜெய்சித்ரா, உதவி பயிற்சி யாளர் அருண்பிரியா ஆகியோரையும், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.