tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஞாயிறன்று (பிப்.27) சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ள கட்சியின் 23ஆவது மாநில மாநாட்டிற்கான இலச்சினையை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, சுதா சுந்தர்ராமன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.பாலா, சி. ராமகிருஷ்ணன், அ.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், மாலதி சிட்டிபாபு, பா.ஜான்சிராணி, எஸ்.வாலண்டினா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.