tamilnadu

img

பெண்களின் பணி நியமனத்திற்கு எதிரான உத்தரவை திரும்பப் பெற்றது ஸ்டேட் வங்கி

மதுரை,ஜன.29- கடும் கண்டனமும் எதிர்ப்பும் எழுந்ததால், பெண்கள் பணிநியமனத்திற்கு எதிரான உத்த ரவை பாரத ஸ்டேட்  வங்கி (எஸ்பிஐ) ஜனவரி 29 சனிக்கிழமையன்று திரும்பப்பெற்றது. பெண்கள் பணி நியமனத்திற்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட உத்தர வுக்கு இந்திய வங்கி ஊழியர் சங்கம், சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.  கருவுற்ற மகளிருக்கு பணி நியமனத்தை மறுத்து, பாலின சமத்துவத்துக்கு எதிராக உள்ள ஸ்டேட் வங்கியின் உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய நிதியமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டேட் வங்கி 31.12.2021 அன்று பணி நியமனங்கள் குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி தரு கிறது. நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புக ளின், மாதர் இயக்கங்களின், தொழிற்சங்கங்க ளின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. ஸ்டேட் வங்கி 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்க ளை கொண்ட அதில் 62 ஆயிரம் மகளிர் ஊழியர்களை கொண்ட பெரிய அரசு வங்கி. வங்கித் துறையில் இவ்வளவு அதிகமாக வேலை வாய்ப்பு தருகிற இன்னொரு வங்கி கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையில் இவ்வ ளவு சுருங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இயற்கை மற்றும் சமூக இனப்பெருக்கம் செயல்முறையின் ஒரு பகுதியாக கர்ப்பம், குழந்தை வளர்ப்பு என்பது இயற்கை நியதி யாகும். பெண்கள் நாட்டின் மற்றும் சமூக பொ ருளாதார முன்னேற்றத்திற்கும் மட்டுமல்ல ஊதியம் பெறாத பணிகளை செய்துவருகி றார்கள்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்துறையில் இருந்து வந்துள்ள இந்த உத்தரவு கண்டிக்கத்தக்கதாகும்.இந்த  ஆணையை திரும்பப்பெறவேண்டும் என்று  சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு வலியுறுத்தியது. எஸ்.பி.ஐ வங்கியின் இந்த உத்தரவு பாரபட்சமானது, சட்டத்திற்கு புறம்பானது. சட்டம் வழங்கும் மகப்பேறு சலுகை கள் பாதிக்கும் வகையில் உள்ளது  என்று தில்லி மகளிர் ஆணையம் தலைவர் ஸ்வாதி மலிவால் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எஸ்பிஐ வங்கியின் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இவ்வாறு எழுந்த எதிர்ப்பால் 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது என வெளியிட்ட  சுற்றறிக்கையை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளை தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி உத்தரவை திரும்பப்பெற்றது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது பாரத ஸ்டேட் வங்கி. இது பாலின சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி. பாலின நிகர் நிலைப் பார்வையோடு குரல் கொடுத்த எல்லோருக்கும் பாராட்டும், நன்றியும் என்று தெரிவித்துள்ளார்.