tamilnadu

img

மதுரை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

மதுரை மாநகராட்சியில்  “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

மதுரை, செப்.30- மதுரை மாநகராட்சி சார்பில் “உங்களுடன் ஸ்டா லின்” சிறப்பு முகாம் மண்ட லம் 1, வார்டு 16, மண்டலம் 2,  வார்டுகள் 23, 24, 25 மற்றும்  மண்டலம் 5, வார்டு 100  ஆகிய பகுதிகளில் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் வ. இந்திராணி செவ்வாயன்று முகாம்களை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வள்ளுவர் காலனி பீ.பீ.குளம் உழவர் சந்தை அருகிலுள்ள ரோட்டரி பள்ளி, செல்லூர் 50 அடி சாலை எழில் விசாகன் மஹால், அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலை பி.எம்.எஸ். வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்  ளிட்ட இடங்களில் முகாம்கள்  நடைபெற்றன. புதிய ஆதார் அட்டைக் கான ஆன்லைன் பதிவு, ஆதார் அட்டையில் திருத்  தம் செய்யும் பணிகள் முகா மில் மேற்கொள்ளப்பட்டன. விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய ஆதார்  அட்டைகள் வழங்கப்பட் டன. இந்த நிகழ்வில் துணை  ஆணையாளர் ஜெய்னுலாபு தீன், உதவி ஆணையாளர் ரவிக்குமார், மக்கள் தொட ர்பு அலுவலர் மகேஸ்வரன்,  நிர்வாக அலுவலர் சிவக்  குமார், உதவி செயற்பொறி யாளர் காமராஜ், உதவிப் பொறியாளர்கள் மணியன், செல்வவிநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயராஜ், டி.குமரவேல், மாணிக்கம், முரளி கணேஷ், முத்து லெட்சுமி உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.