உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 9277 மனுக்களுக்கு தீர்வுகள் ஆணைகள் வழங்கல்
நாகர்கோவில்,அக்.9- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி க்குட்பட்ட கோட்டார் எம்.டி.பி சமூக நலக்கூடத்தில் அக்டோ பர் 9 அன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆட்சியர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 270 முகாம்கள் நடத்தப்பட்டு 1,35,041 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாமில் பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், தொழிலாளர் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயர்மாற்றம்முகவரி மாற்றம், ஆதார் அட்டைகளில் பெயர்மாற்றம், கடனுதவிகள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட 9277 மனுக்களுக்கு தீர்வுகள் மற்றும் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களு க்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திடவும், பெறப்படும் மனுக்களை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் முகாம் ஒருங்கி ணைப்பாளர்க்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொது மக்கள் உங்கள் வீட்டின் அருகில் நடைபெறும் முகாம்க ளுக்கு சென்று மனுவினை அளித்து தங்களின் தேவைக ளுக்கு தீர்வு காண உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பயன் படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலதலைவர் கோகிலா வாணி, பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
