அம்மையநாயக்கனூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சின்னாளப்பட்டி, செப்.19- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் தமிழக அரசு உத்த ரவுப்படி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜயலெட்சுமி, திமுக பேரூர் செயலாளர் ராஜாங்கம், துணைத் தலைவர் விமல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலு வலர் பூங்கொடிமுருகு வரவேற்றார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர். இதில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பட்டா மாறுதல், சாதிச்சான்றிதழ், உடனடி தற்காலிக மின் இணைப்பு, இருப்பிட சான்றிதழ், பெயர் மாற்றம், வரு மான சான்றிதழ், புதிய ரேசன் கார்டு என உடனடியாக தீர்வு காணப்பட்ட 30 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் சான்றி தழ்கள் வழங்கினார். மேலும் இந்த முகாமில் கவுன்சிலர் கள் முகமதுநசீர், கருணாகரன், காசியம்மாள், கவிதா, செல்வி, சத்யா, திமுக நிர்வாகிகள் திருமுருகன், மலை யாளம், கந்தபிரபு மற்றும் பேரூராட்சி முதல் நிலை எழுத்தர் விவேக், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், வருவாய்த்துறையினர் உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.