tamilnadu

img

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், செப்.30 – முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார்  மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய் கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கவிதாராணி தலைமையில் நடை பெற்ற முகாமை, திமுக தெற்கு மாவட்ட  ஓட்டுநர் அணியின் அமைப்பாளர் தங்க மாங்கனி, மாவட்ட அமைப்பாளர் அய்ய னார், பேரூர் கழக செயலாளர் உதயசூரி யன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முகாமில் சிவகாசி சுகாதார மாவட்ட அலுவலர் ஜெகவீரபாண்டியன், வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் சமுத்திரம், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர் கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண், பல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளின் மருத்து வர்கள் சிகிச்சை வழங்கினர். இசிஜி, ரத்த  பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரி சோதனைகள் இலவசமாக மேற்கொள் ளப்பட்டன. முகாமில் 1500-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு பயன் பெற்றனர். கர்ப் பிணி பெண்களுக்கு நலம் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.