tamilnadu

img

தொழிற்சங்கத்தை அழிக்க முடியாது

சென்னை, ஏப். 10- தொழிலாளர்கள் உருவாக்கப்பட்ட தொழிற்சங் கத்தை யாராலும் அழிக்க முடியாது என ஆவடியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கூறினார். ஓசிஎப் ஒர்க்கர்ஸ் யூனியன், அனைத்திந்திய பாதுகாப்பு துறை ஊழியர் கூட்டமைப்பின் வைர விழாவையொட்டி “இன்றைய சூழலில் தொழிற்சங்கங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஆவடியில் ஞாயிறன்று (ஏப். 10) நடைபெற்றது.தலைவர் இரா.குசேலர் தலைமை தாங்கினார்.   இதில் கலந்து கொண்ட சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில்,  “தொழிற்சங்கங்களை எந்த அரசும் உருவாக்க வில்லை. அது தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டது. எனவே யாராலும் தொழிற்சங்கத்தை அழிக்க முடியாது” என்றார். தொழிற்சங்கத்தின் கடந்தகால நிகழ்வுகளை மறந்து விட்டு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுவது கடினம்.

1819ஆம் ஆண்டு இந்தியாவிலேயே 1 முதல் முறையாக மெட்ராஸ் லேபர் யூனியன் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் னரே தொழிலாளர்கள் தன்னிச்சையாக பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஏராளமான திடீர் போராட்டங்கள் நடத்தப் பட்டது. இதனையடுத்து, முதலாளிகளின் வேண்டு கோளுக்கிணங்க 1926ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டம்கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறினார்.  தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடினால் உற்பத்தி பாதிக்கிறது. எனவே அதை கட்டுப்படு த்துவதற்காக தொழிற்சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டதுதான் அந்த தொழிற்சங்க சட்டங்களே, தவிர தொழிலா ளர்களுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல அந்த சட்டம் என்பதையும் சுட்டிக் காட்டினார். புதிய பொருளாதாரக் கொள்கைக்கு நிதி மூலதனம் வேகமாக வரக்கூடிய சூழலில், ஒவ்வொரு அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறது.

தமிழகத்திலும் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன் முக்கியமான அம்சமே தொழிற்சங்கங்கள் உருவாவதை தடுப்பதும், அதற்கு அரசு உதவி செய்வதும்தான் எனவும் சுகுமாறன் தெரி வித்தார். இந்தியாவில் ஒரு பாசிச ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாசிசத்தின் முதல் எதிரி தொழிற் சங்கம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஏனென் றால் தொழிற்சங்கம்தான் திரட்டப்பட்ட போராளி களுடைய படை. எனவே தான் பாசிச அரசு முதலில் கை வைப்பது இந்த திரட்டப்பட்ட படை மீது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொழிற்சங் கங்களை யாராலும் அழிக்க முடியாது என்பதை தொடர்ந்து பறைசாற்றுவோம் என்றார். பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் அறிமுக உரை யாற்றினார். டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), மு.சுப்பிர மணியன் (எச்.எம்.எஸ்), இரா.அந்திரிதாஸ் (எம்.எல்.எப்),  க.பேரறிவாளன் (எல்.எல்.எப்) ஆகி யோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். செயல் தலைவர் என்.ஜெ.ராமன், சங்க நிர்வாகிகள் என்.ெஜ.ராமன், மனோஜ்குமார், பேரரசி, எம்.குமார், விஜயசீலன், முரளி உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.