மாநில துணை வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தொடக்கம்
சென்னை, ஆக.18- சென்னை அருகே வண்டலூர் காவல் துறை பயிற்சியகத்தில் 190 துணை மாநில வரி அலுவலர்களுக் கான சிறப்பு பயிற்சி முகாமை அமைச் சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக அரங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச் சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்த னர். வணிக வரி அலுவலர்களின் நிர்வா கத் திறனை மேம்படுத்தும் நோக்கத் துடன், ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் ஆக.18 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும் வகையில் இந்த பயிற்சி முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகவரித் துறை செயல்பாடு கள் தொடர்பான சட்டங்கள், விதி கள் மற்றும் நடைமுறைகள், சட்டப் பூர்வ கடமைகள், சமீபத்திய வரிச் சட்டங்கள், வரிச் சேவை மேம்பாட்டுத் திட்டங்கள், அதிநவீன தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, தினந்தோறும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வழங்கப்படும்.