சேலம், பிப்.1- கல்லூரி மாணவர்கள் விடைத் தாள்களை அனுப்புவதற்கு தபால் நிலையங்களில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் இணையவழியில் ஆன்-லைன் மூலமாக நடைபெற உள்ளது. இதனால் கல்லூரி மாணவர் கள் தங்களின் தேர்வு விடைத் தாள்களை தபால் மூலமாக அனைத்து தபால் நிலையங்களி லும் அனுப்பலாம். மாணவர்கள் விடைத் தாள்களை சிரமமின்றி அனுப்புவதற்கு ஏதுவாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் தலைமை தபால் அலுவலகத்தில் இரவு 9 மணி வரையிலும் ஆத்தூர் தலைமை அஞ்சல் அலுவல கம், அஸ்தம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட தபால் நிலையங்க ளில் இரவு 7 மணி வரையிலும், பேர்லேண்ட்ஸ், செவ்வாய்ப் பேட்டை, சேலம் தெற்கு, அம்மாபேட்டை, அயோத்தியாப் பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட 61 துணை அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்ட்டர் வசதி ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சேவை யானது பருவத்தேர்வு முடியும் வரை செயல்படும். எனவே கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலைய சேவையை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்தார்.