திருச்சியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு மாலை நேர தேர்வுகள்
கல்வியாளர்கள் வரவேற்பு
திருச்சி, ஆக. 18- பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) அனைத்து உயர்நிலைப் பள்ளிகளின் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி மாலை நேர குறுந்தேர்வுகள் (ஸ்லிப்) நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு சிறிய அளவில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இப்போது 250 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 22,000க்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய வகையில் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகிறது. பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, இரண்டு வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கூட்டு முயற்சியாக வினாத்தாள்கள் அமைக்கப்பட்டு, பொது வான வினா வங்கியாக தொகுக்கப்பட்டு, பள்ளிகள் முழுவதும் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக தலைமை ஆசிரி யர்கள் மூலம் வினாத்தாள் விநியோகிக்கப் படுகின்றன. தினசரி தேர்வுகள் 25 முதல் 30 மதிப்பெண் கள் வரை இருக்கும். சில சமயங்களில் 50 மதிப்பெண்கள் வரை இருக்கும், பெரும்பா லான கேள்விகள் குறுகிய பதில் வடிவத்தில் இருக்கும். மாணவர்கள் சுழற்சி முறையில் பாடங்களில் சோதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில், இந்த மாலை நேர சிறப்பு தேர்வுகளால் திருச்சி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள னர். மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.