tamilnadu

img

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை,நவ.1- தீபாவளி முடிந்த நிலையில் மக்கள் ஊர்களுக்கு திரும்ப நவம்பர் 2 சனிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.  நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 3 நாட்களுக்கு மொத்தம் 12,848 பேருந்துகள் பல நகரங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 2,692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப 1.50 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.