tamilnadu

img

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு

சேலம், ஆக.12 - தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு  ஆக.9, 10, 11, ஆகிய தேதிகளில் சேலம் திருவாக்கவுண்டனூரில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான திங்களன்று, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதில் தலைவராக கோழிக்கோடு கோட்டத்தைச் சேர்ந்த  பி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளராக கோவை கோட்டத்தைச்  சேர்ந்த சுரேஷ், பொருளாளராக சென்னை கோட்டத்தைச் சேர்ந்த  ஜானகிராமன் மற்றும் துணைத் தலைவர்களாக சி.முத்துசாமி, ஆர்.பிரீத்தி, டி.வாஞ்சுநாதன், தீபக் விஸ்வநாத், இணைச் செய லாளர்களாக ஆர்.கே.கோபிநாத், ஆர்.சர்வமங்கலா, ஐ.கே.பிஜூ, சி.செல்வராணி, உதவிப் பொருளாளராக ஆர்.கிரண்குமார் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பா ளர்களாக ஆர்.எஸ்.செண்பகம், கே.ஆர்.வினி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாநாட்டில் 64 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.