tamilnadu

img

வடிவம் மாறும் மீனினங்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

புவி வெப்ப உயர்வினால் சில மீனினங்கள் உடல் அளவிலும் வடிவிலும்           சுருங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான உயிரினங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மீனினங்கள் தவிர சில முதுகெலும்பற்றவை, சில தாவரங்கள் சிறியதாக மாறுகின்றன, வேறு சில உடல் அளவில் பெரிதாகின்றன என்று பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அட்லாண்டிக் மீனினம்

பல்லாயிரக்கணக்கான தாவர விலங்குகளின் மாறும் உடலளவு பற்றி உலகளவில் பகுப்பாய்வு செய்து ஆராயப்பட்டபோது அவற்  றில் பலவற்றின் உடல் சிறிதாவது  கண்டுபிடிக்கப்பட்டது. மீனினங்க ளில் இது தெளிவாக காண முடி கிறது என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். அவை அளவில் சிறிதா கின்றன. ஒரு மீட்டர் நீளம் வரை வள ரும் இயல்புடைய வட அட்லாண்டிக்  முள் ஸ்கேட் (thorny skate) மீனினம்  உடல் அளவில் சுருங்குகிறது. சிறிய உடலைப் பெற்றுள்ள மேக்கரல் (mackerel) போன்ற இனங்கள் பெரிதாக வளர்கின்றன. இது சூழல் மண்டலங்களின் உள்ள டக்கத்தையும் செயல்பாடுகளையும் மாற்றுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உடலளவு சுருங்கு வது மீன்களில் பொதுவாக காணப்  படுகிறது என்றாலும் சில தாவரங்களி லும் முதுகெலும்பற்ற உயிரினங்களி லும் இதைக் காணமுடிந்தது. ஆனால்  ஆர்க்டிக்கில் வாழும் வேறு சில உயி ரினங்கள் பெரிதாக வளர்கின்றன.

புவி வெப்ப உயர்வும்  மனித நுகர்வும்

உடல் அளவில் நிகழும் இந்த மாற்றங்கள் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்கின்றனர். இந்த மாற்றங்கள் சில உயிரினங்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் காணப்படுகிறது. புவி வெப்பமடை வதும் மனிதனின் மிதமிஞ்சிய நுகர்வும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்  கூறுகின்றனர். பூமியில் உள்ள வளங்  களின் மீது மனிதன் செலுத்தும் தாக்  கத்தால் (Anthropocene) இவ்வாறு நிகழலாம் என்று கருதப்படுகிறது. வட கடலில் வாழும் மீன்கள் மற்றும் அலாஸ்காவில் வாழும் சிறிய  பசிபிக் சால்மன் (smaller Pacific salmon) இனங்களில் உடல் அளவு சுருங்குவது காலநிலை மாற்றத்தால் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாலூட்டிகள், முது கெலும்பற்றவை, தாவரங்கள், மீன்கள், இருவாழ்விகள் மற்றும் ஊர்வன வகையை சேர்ந்த விலங்கு கள் பற்றிய 4,292 ஆவன விவ ரங்கள் ஆராயப்பட்டன. இவற்றில் கடலின் அடித்தட்டில் வாழும் உயிரினங்களும் அடங்கும்.

உயிரினங்களின் பதிலீடு

17 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய பன்னாட்டு ஆய்வுக்குழு இந்த ஆய்வுகளை மேற்கொண்டது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை தி சயன்ஸ் (The Science) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. “உண்மையில் இந்த உயிரினங்களின் உடல் வடி வம் சுருங்கவில்லை என்று ஆய் வுக்குழு கண்டறிந்துள்ளது. உயிரி னங்களில் நிகழும் பதிலீடு (species  replacement) மற்றும் இனங்களின்  கூட்டத்திற்குள் ஏற்படும் மாற்றங் களால் (changes in species population) சில உயிரினங்கள் அளவில் சிறிதாகின்றன. இவ்வாறு சிறிதாகும் இனங்கள்  காலப்போக்கில் மேலும் மேலும் சிறிய வடிவில் மாறுகின்றன. நாளடை வில் இந்த சிறிய உயிரினங்கள் மறையத் தொடங்கும்போது பெரிய வடிவில் இருக்கும் உயிரினங்கள் அவற்றை பதிலீடு செய்கின்றன. இந்தப் போக்கு மீனினங்களில் தெளிவாகக் காணமுடிகிறது. சரா சரியாகப் பார்க்கும்போது மாற்றங்  கள் தென்படவில்லை. மற்ற உயிரி னங்களைப் பற்றிய விவரங்கள் குறை வாக உள்ளன. இந்தப் போக்கு வெவ்வேறு இடங்களில் உள்ள உயிர்ப் பன்ம யத்தன்மை மற்றும் அதன் வகை யில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை” என்று யார்க் (York) பல்க லைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்குழுவின் முன்னணி ஆய்வா ளர் டாக்டர் ஐ மார்ட்டின்ஸ் (Dr I  Martins) கூறுகிறார். உயிர்த் தொகுப்பை (Biomass) நிலை நிறுத்த குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பெரிய உயிரினங்கள் அதை விட சிறிய உயிரினங்களால் பதிலீடு செய்யப்படுகின்றன.

ஒன்று அழிந்தால் மற்றொன்று

சூழல் மண்டலங்கள் இந்த மாற்றங்களை ஈடு செய்கிறது என்ற கருத்தை இது ஆதரிக்கிறது என்று ஆய்வுக்கட்டுரை கூறு கிறது. “பெரிய உயிரினங்கள் மறை யும்போது மற்றவை அந்த இடங்களை எடுத்துக்கொள்கின்றன. முந்தைய உயிரினங்கள் பயன் படுத்தியதில் கிடைக்கக்கூடிய வளங்களை இந்த உயிரினங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. காலப்போக்கில் உயிரினங்க ளின் உடல் வடிவங்களில் நிகழும்  மாற்றங்களை புரிந்துகொள்ள, அங்கீகரிக்க, ஆராய இந்த சிக்கலான செயல்முறைகளை கட்டாயம் நாம்  அறிந்திருக்கவேண்டும். உலகில் பர வலாகக் காணப்படும் உயிரினங்க ளின் இத்தகைய பதிலீட்டால் ஏற்படும் விளைவுகளை நம்மால் மதிப்பிடமுடியும். உயிரினங்கள் சிறிதாவது முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஏனென்றால் விலங்குகளின் உடல் அளவு சூழல் மண்டலங்களில்  அவற்றின் பங்கு, அவற்றில் இருந்து  மனிதன் எவ்வாறு நன்மையடை கிறான் போன்றவற்றை ஈடு செய்கி றது. எடுத்துக்காட்டு பெரிய மீன்கள் சிறிய மீன்களை விட அதிக மனி தர்களுக்கு உணவாகிறது என்று  ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரி யர்களில் ஒருவரும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் (St Andrews) பல்க லைக்கழக விஞ்ஞானியுமான பேரா சிரியர் மரியா டொர்னெல்லாஸ் (Prof Maria Dornelas) கூறுகிறார்.

“துரதிர்ஷ்டவசமாக மீன்களைத் தவிர தெளிவான முடிவுகளைப் பெற  மற்ற உயிரினங்கள் பற்றி போது மான அளவு ஆவண விவரங்கள் இல்லை. உயிரினங்களின் உடல் அளவில் நிகழும் மாற்றங்கள் பற்றிய இந்த ஆய்வு உணவுச்சங்கிலி, மற்ற உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வது பற்றிய வருங்கால ஆய்வுகளுக்கு உதவும்” என்கிறார் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளற் டாக்டர் பிரான்சிஸ்கா ஷ்ராட் (Dr Franziska Schrodt). உயிரினங்களின் உடல் வடிவில் ஏற்படும் இத்தகைய வியத்தகு ஆனால் வருத்தமளிக்கக்கூடிய மாற்றங்களுக்குக் காரணம் மனி தனே என்று இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. சூழலைக் காக்க முன்வந்தால் மட்டுமே பூமி என்ற இந்த அழகான கோளில் மனிதன் வாழமுடியும்.