ஐ.ஏ.எஸ் முதல் இளநிலை உதவியாளர் வரையிலான அரசுப் பணிகளைக் குறிவைத்துப் பயணிப்பவர்கள் வரலாறு புவியியல், சமூக வியல், பொருளியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட படிப்புகளைத் தேர்வு செய்யலாம். போட்டித் தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து பெரும் அளவில் வினாக்கள் இடம் பெறும் என்பதால் அவற்றில் வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுபவர்கள் முதன்மைத் தேர்வில் எதை விருப்பப் பாடமாக எடுக்க விரும்புகிறார்களோ, அதையே தங்கள் பட்டப்படிப்பாகவும் வைத்துக் கொள்கிறார்கள். ஓரளவு வழிகாட்டுதலை பத்தாம் வகுப்பிலேயே பெற்றுக் கொள்பவர்கள் +2வில் இந்த சமூக அறிவியல் பாடங்கள் இருக்கும் பிரிவைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். தொடர்ச்சி கிடைக்கும் என்ற அவர்களது எண்ணம் மிகச் சரியானது என்பதைத்தான் போட்டித் தேர்வுகளில் கிடைக்கும் அனுபவங்கள் காட்டுகின்றன. இந்தப் பாடங்கள் வெற்றியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. அதோடு, ஆய்வுப்படிப்பை விரும்புவர்களும இந்தப் பாடங்களைத் தேர்வு செய்கிறார்கள். இந்தப் பாடங்களில் ஆய்வுகளும் மிக முக்கியமானவையாகும். பலர் பளளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களாகலாம் என்ற எண்ணத்திலும் இந்தப் பாடங்களைத் தேர்வு செய்கின்றனர்.