ஸ்ரீநகர், பிப். 8 - சமூகநீதிக் கொள்கையை முன் னெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்மு-காஷ்மீர் முன் னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறி வித்திருந்தார். மேலும், இக்கூட்டமை ப்பில் இணையுமாறு காங்கிரஸ், அதிமுக உள்பட 34 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கையை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில் நிறுத்தும் முயற்சியை முன்னெடுத்த மு.க.ஸ்டாலின் முயற்சியை பாராட்டுகிறேன். இந்த முன்முயற்சிக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஆதரவை வழங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.