tamilnadu

img

ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நாயகி

ஸ்மிருதி மந்தனா  இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நாயகி

ஆடவர் கிரிக்கெட்டில் விராட் கோலி எப்படி ‘கிங்’ என்று  புகழப்படுகிறாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்கு ஆடும் ஸ்மிருதி மந்தனாவை ‘குயின்’ என்று  அழைப்பது மிகவும் பொருத்தமானதே. ஜூலை 18, 1996 அன்று மும்பையில் (மகாராஷ்டிரா) பிறந்த ஸ்மிருதி மந்தனா, விளையாட்டு ஆர்வமுள்ள குடும்பத்தில் வளர்ந்தார். தந்தையும், சகோதரரும் கிரிக்கெட் வீரர்களாக இருந்த சூழலில், 6 வயதிலேயே கிரிக் கெட்டில் ஈடுபட்டார். இடது கை மட்டை யாளரான (பேட்டர்) அவர், வெறும் 13  வயதில் மகாராஷ்டிராவின் சீனியர் அணிக்காக விளையாடும் அசாதாரண சாதனையை படைத்தார். இந்த ஆரம்ப கால அனுபவங்கள் அவரை ஒரு  முதிர்ந்த வீராங்கனையாக வடி வமைத்தன. சர்வதேச அரங்கில் எழுச்சி 2013 ஏப்ரலில் வெறும் 16 வயதில் வங்கதேசத்திற்கு எதிராக சர்வதேச அளவில் அறிமுகமான மந்தனா, 2017 உலகக்கோப்பையில் தனது முழு மையான திறமையை வெளிப்படுத்தி னார். மேலும் இந்தியாவை 2005க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று முக்கிய தூணாக நின்றார். சாதனைகளின் வரிசை மந்தனாவின் கிரிக்கெட் பயணம் வரலாற்றுச் சாதனைகளால் நிரம்பி யுள்ளது. 2019இல் நியூசிலாந்துக்கு எதி ராக வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்து டி-20 போட்டிகளில் ஒரு இந்தியப் பெண்மணியின் வேகமான அரைசதம் என்ற சாதனையைப் படைத் தார். ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக 10 அரைசதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற  தனிப்பெரும் பெருமையும் அவரு டையது. மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி  என்ற சாதனை அவரது பன்முகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. 2024ஆம் ஆண்டு மந்தனாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக பதிவாகியுள்ளது. ஒரே ஆண்டில் 1,602 ரன்கள் குவித்து உலக  சாதனை படைத்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய வேகமான மற்றும் இளம் வீராங்கனை என்ற இரட்டை சாதனை யையும் நிகழ்த்திக் காட்டினார். 19 வய துக்குட்பட்டோருக்கான மாநிலங் களுக்கு இடையேயான போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் அவரது சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் சமீபத்தில் நிகழ்ந்தது. ஸ்மிருதி மந்தனா தனது 12ஆவது  ஒருநாள் சதத்தை தொடக்க பேட்டராக அடித்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை யை எட்டினார். மேலும், வெறும் 50  பந்துகளில் அதிவேகமாக சதம் விளா சிய இந்திய வீரர் என்ற விராட் கோலி யின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த அதிவேக சதம், அவரது  திறனை யும் உலகுக்கு நிரூபித்தது. விருதுகளும் அங்கீகாரங்களும் 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்றார். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எலிஸ் பெர்ரியைத் தவிர, இந்த விருதை இரண்டு முறை வென்ற ஒரே வீராங்க னை என்ற தனிச்சிறப்பும் உண்டு. ஐசிசி மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை யும், பிசிசிஐயின் சிறந்த சர்வதேச வீராங்கனை விருதும் பெற்றார். பேட்டிங் திறமையை மட்டுமே சார்ந்திருக்காமல், மந்தனா ஒரு சிறந்த தலைவராகவும் வெளிப்பட்டுள்ளார். 22 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற போது, இந்திய மகளிர் அணியின் இளம் டி-20 கேப்டன் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். 2024இல் நடைபெற்ற மகளிர் பிரிமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று, தனது அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை  வென்று கொடுத்தார். தற்போது இந்திய  ஒருநாள் அணியின் துணைக் கேப்ட னாகவும் செயல்பட்டு வருகிறார். விளையாட்டு பாணியும் தனித்துவமும் மந்தனாவின் பேட்டிங் என்பது ரன்கள் சேகரிப்பு மட்டும் அல்ல, அது  ஒரு அலாதியான அனுபவம். இடது கை  மட்டையாளராக, அவர் பந்தை கவர் பகுதிக்கு அனுப்பும் விதம் மிகவும் சிறப்பானது. அவரது டிரைவ்கள் நிலத்தில் பாய்ந்து செல்லும் போது, அது  ஒரு கலைப்படைப்பாக மாறுகிறது. அழுத்தமான சூழல்களில் கூட அவரது மனநிலை அசைவதில்லை. பெரிய இலக்குகளை துரத்தும் போதும், குறைந்த மதிப்பெண்ணை பாதுகாக் கும் போதும், அவரது அணுகுமுறை முதிர்ச்சியுடன் இருக்கும். மறுமலர்ச்சி மந்தனாவின் வெற்றிப் பயணம், மகளிர் கிரிக்கெட் பெற்றுள்ள மறு மலர்ச்சியின் பிரதிநிதி. ஒரு காலத்தில் கவனிக்கப்படாத, ஊக்குவிக்கப்படாத மகளிர் கிரிக்கெட், இன்று பெரும் கவ னத்தையும் மதிப்பையும் பெற்றுள்ளது. மந்தனா போன்றவர்கள் படைத்த  அடித்தளத்தின் மீதே கட்டமைக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்து ஏராளமான இளம்  பெண்கள் இன்று கிரிக்கெட் மட்டையை  எடுக்கிறார்கள், அவர்களில் பலருக்கு ஒரு ஹீரோவாக விளங்குகிறார். 28 வயதே ஆகியுள்ள மந்தனா, இன்னும் பல சாதனைகள், இன்னும் பல சிகரங்களை எட்டும் நிலை யில் உள்ளார். அவர் மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாகவும், நம்பிக்கையின் சின்னமாகவும் விளங்குகிறார். -சி.ஸ்ரீராமுலு