tamilnadu

img

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில்  சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி 

விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம், ஆக.12- ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், பொருளூர், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, இடையக்கோட்டை, சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு தற்போது அமோக விளைச்சல் அடைந்துள்ளது.  விவசாயிகள் தங்களது தோட்டத் தில் பயிரிட்டுள்ள சின்ன வெங்கா யத்தை கூலி ஆட்களை கொண்டு அறு வடை செய்து அதை தலா 50 கிலோ போன்ற மூட்டையில் வைத்து தமிழ கத்தின் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று வியாபாரியிடம் விற்பனை செய்கின்றனர்.  தற்போது அதிக வரத்தால் ஒரு கிலோ வெங்காயம் தரத்துக்கு ஏற்றவாறு ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.  சின்ன வெங்காயத்தை தரம் பிரித்து தனித்தனியாக மூட்டையில் அடைத்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.  இதுகுறித்து காந்தி மார்க்கெட் பணியாளர் செல்வன் கூறியதாவது:  தற்போது திருநெல்வேலி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் அதிக அளவு கேர ளாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவதால், ஒட்டன்சத்திரம் பகுதி சின்ன வெங்காய விற்பனை மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. ஒட்டன்சத்தி ரம் பகுதியில் அதிக விளைச்சலால், தற்போது கடும் விலை வீழ்ச்சி அடைந்து ள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வருகின்ற பங்குனி மாதத்திற்கு பிறகு வரத்து குறைந்த நேரத்தில் சின்ன வெங்காயம் ரூ. 100க்கு மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.