tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவேந்தல் உடல் தான ஒப்புதல் படிவம் கொடுத்து நினைவு கூறல்

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவேந்தல் உடல் தான ஒப்புதல் படிவம் கொடுத்து நினைவு கூறல்

கோவை, செப்.12- மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனு சரிக்கும் விதமாக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர், ஆயிரக்கணக்கானோர் உடல் தான ஒப்புதல் படிவம் கொடுத்து தங்களது அன்புத்தலைவனை நினைவு கூர்ந்தனர். யெச்சூரி மறைந்து ஓராண்டு கடந்த நிலை யில், முதலாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று நாடு முழுவதும் அனுசரிக் கப்பட்டது. மானுடத்தை நேசித்த மக்கள் தலைவன் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தில், ஆயிரக்கணக்கானோர் உடல் தானம், கண் தானம் குறித்த ஒப்புதல் படி வம் கொடுத்து, அறிவியல் வளர்ச்சிக்கு துணை நிற்பது என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. இதனையேற்று, தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களில், ஆயிரக் கணக்கானோர் உடல்தானம், கண் தானம் குறித்த ஒப்புதல் படிவங்களை வழங்கினர். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடை பெற்ற யெச்சூரி நினைவேந்தல் கூட்டத்தில், சிபிஎம் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர். நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.மனோகரன், கே.அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், வி.தெய்வேந்திரன், என். ஆர்.முருகேசன் உள்ளிட்ட 90 பேர் மர ணத்திற்குப் பிறகு தங்களது உடலை மருத் துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்திக் கொள் ளவும் என்கிற ஒப்புதல் படிவத்தை வழங் கினர். இதேபோன்று பொள்ளாச்சியில் நடை பெற்ற நிகழ்வில் 25 பேர் உடல்தான ஒப்பு தல் படிவத்தை வழங்கினர். கோவை மாவட் டத்தில் 115 பேர் உடல்தான ஒப்புதல் படிவத்தை வழங்கினர். இந்நிகழ்வில், கட்சியின் மூத்த  தோழர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, என்.வி.தாமோ தரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆறுச்சாமி, ஆர்.கோபால், வி.ராமமூர்த்தி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட் டக்குழு அலுவலக வளாகத்தில் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த, முன்னாள் பொதுச் செயலாளர் மகத்தான தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவலை ஏற்று திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 150 பேர் உடல் தானம் செய்வதற்கு பெயர்ப் பதிவு செய்துள்ளனர். திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக அலங்கரிக்கப்பட்டு தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் உருவப்படம் முன்பாக வெள்ளியன்று காலை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் தலை மையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற் றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதை யடுத்து உடல் தானம் செய்வதற்கான உறுதி மொழிப் படிவங்களை நிகழ்வில் பங்கேற் றோர் காமராஜிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் வடக்கு, தெற்கு மாநகரம், ஒன்றியம் மற்றும் வேலம்பாளையம் நகரக்குழு ஆகிய ஐந்து  இடைக்குழுக்களைச் சேர்ந்த 95 பேர் படி வங்களை அங்கு வழங்கினர். இடைக்கமிட்டி செயலாளர்கள் டி.ஜெயபால், ஆர்.காளியப் பன், செமணிகண்டன், ச.நந்தகோபால்,  பா. சௌந்தரராசன் உள்பட மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் கட்சி அணியினர் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்ற னர். அதேபோல் உடுமலை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் ஸ்டாலின் நிலையத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூத னண் தலைமையில் நடைபெற்ற நினைவஞ் சலி நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தியிடம் 51 பேர் கண் மற்றும் உடல் தானம் செய்வதற்கான படிவங்களை வழங்கினர். இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், ஒன்றிய செயலா ளர்கள் ஜெகதீசன், சசிகலா மற்றும் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மடத்துக்குளத்தில் தாலுகா குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 பேர்  உடல் தான படி வங்களை தாலுகா செயலாளர் ஆர்.வி.வடி வேலுவிடம் ஒப்படைத்தனர். தாராபுரம் கட்சி அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் என்.கனகராஜ், தாலுகா குழு ஒருங்கி ணைப்பாளர் ஆர்.வெங்கட்டராமன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் சீத்தாராம் யெச்சூரிக்கு நினைவஞ்சலி செலுத்தி 9 பேர் உடல் தானம் படிவம் வழங்கினர். இதேபோன்று, ஊத்துக்குளியில் 23 பேர் உடல் தான படி வம் வழங்கினர். திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக மொத்தம் 27 பெண்கள் உட்பட 173 பேர் உடல்  மற்றும் கண் தானம்  செய்வதற்கு படிவம் கொடுத்துள்ளனர். தருமபுரி தருமபுரி செங்கொடிபுரத்தில் யெச்சூரி யின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், 18  பேர் முழு உடல் உறுப்பு தானம் செய்வதற் கான உறுதிமொழி கடிதத்தை மாவட்ட செயலாளர் ஆர்.சிசுபாலனிடம் வழங்கினர். குறிப்பாக கம்பைநல்லூரை சேர்ந்த இடைக் கமிட்டி உறுப்பினர் ஆணஸ்ட்ராஜ், நிரோஷா தம்பதியினர். குடும்பமாக முழு உடல் உறுப்புதானம் செய்தனர்.  இதேபோன்று, அரூர், பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி ஒன்றியம், பாலக்கோடு, பாப்பாரப் பட்டி, பென்னாகரம் மேற்கு ஒன்றியம், பென்னாகரம் நகரம், பென்னாகரம் கிழக்கு, நல்லாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சீத்தா ராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வுகளில், கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாநி லக்குழு உறுப்பினர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, சோ.அருச்சுனன், சி.நாகராசன், வே. விஸ்வ நாதன், எம். முத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், கோத்த கிரி, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தோழர் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் உடல்தான ஒப்புதல் படிவம் ஒப்படைக்கும் நிகழ்வு நடை பெற்றது. இதில், முதற்கட்டமாக 40 பேர்  ஒப்புதல் படிவத்தை வழங்கினர். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன் மூத்த தோழர் என்.வாசு உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். சேலம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண் தானம் மற்றும் உடல் தான நிகழ்ச்சி ராமகிருஷ்ணா பார்க் அருகில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவல கத்தில், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது.  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் முன்னணி ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர். இதில், முதற்கட்டமாக 15 பேர் உடல் தான ஒப்புதல் படிவத்தை வழங்கினர்.  இதேபோன்று, சேலம் உருக்காலை, நீதி மன்றம் மற்றும் நங்கவள்ளி, மேட்டூர், பெத்த நாயக்கன்பாளையம், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு உள்ளிட்ட இடைக் கமிட்டிகளில் யெச்சூரியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, உடல் தான படிவம் வழங்கப்பட்டன.  ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய முன்னாள் பொது செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம், உடல் தானம் வழங்கும் நிகழ்வு ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தர ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், முன்னாள் செயலாளர் பி.மாரிமுத்து, முன் னாள் செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட 101 பேர் உடல் தானம் செய்வ தற்கான படிவங்களை வழங்கினர். சத்திய மங்கலம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பலர் உடல் தானம் படிவம் பூர்த்தி செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாரப்பனிடம் அளித்தனர். இதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் நினைவஞ்சலி நிகழ்ச்சியும், உடல் தானம் செய்ய படிவங்கள் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஒன்றிய, நகர இடைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 38 பேர் உடல் தானத்திற்கான ஒப்பதல் படிவம் கொடுத்து, யெச்சூரி-யின் பணிகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மூத்த தலைவர் ஆதிநாராய ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முருகேசன், எம்.அசோகன், இடைக் கமிட்டி செயலாளர்கள் எஸ்.சீனிவாசன், கந்த சாமி, லட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சக்திவேல் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.