tamilnadu

தனிவார்ப்பென ஓங்கிப் பறைகொட்டுக!

படமெடுத்து ஆடுது சனாதன விஷப்பாம்பு
பெரியார் தடியெடுத்து புறப்படுக இக்கணமே!
‘தமிழ் தமிழர் தமிழ்நாடு’ தனிவார்ப்பென –அவர்
மண்டையில் உறைக்கவே ஓங்கிப்    பறைகொட்டுக! 

கதிரவனுக்கு நன்றி சொல்வோம் ;    உயிர்வளர்க்கும்
உழவருக்கு நன்றி சொல்வோம் ;       இயற்கைக்கு இனிதே
மகிழ்ந்து நன்றி சொல்வோம்; மாட்டையும்      மறக்காமல்
மதித்து உவந்து கொண்டாடுவோம் ;             உழைப்பின் வெற்றி! 

வள்ளுவரே எம்  முன்னோடி ; 
        மானுடத்தின் குறியீடு;
காவிக்கரையான் அரிக்கமுடியா அறிவுப் 
        பெருநெருப்பு;
சாதி மத வெறி அதில்  வெந்து பொடி             சாம்பலாகட்டும் !
சனாதனப் பீடையை போகி கொளுத்திக்             கொண்டாடுக! 

மானுடசத்ரு  மநுவை எரித்துச் சமத்துவப்             பொங்கலிடுக!
உழவைத் தொழிலை உச்சியில் வைத்துக்             கொண்டாடுக!
கல்விக்கு கரையில்லை கற்றோங்கி         தமிழனென்று நின்றாடுக!
வெள்ள அன்பால் மானுடசமுத்திரம்         நாமெனக் கூவிக் கொண்டாடுக!
-சு.பொ.அகத்தியலிங்கம்