tamilnadu

img

மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம் மும்பை, தானேவில் 144 தடை உத்தரவு!

மும்பை, ஜூன் 25- மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மேற்கொண்டுள்ள ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளால், அம்மாநிலத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான பாஜக-வின் இந்த சதித்  திட்டத்திற்கு பலியான அதிருப்தி  எம்எல்ஏ-க்கள் மீது சிவசேனா தொண்டர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து வருகின்றனர். அதிருப்தி எம்எல்ஏ-க்களில் ஒருவரான தனாஜி சாவந்த்  அலுவலகத்தை சிவசேனா தொண்டர் கள் அடித்து சூறையாடினர். இதனால், தலைநகர் மும்பை மற்றும் தானே நகரங்களில் 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா எம்எல்ஏ-க்களை வைத்தே உத் தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்கும் சதி வேலையை பாஜக கச்சிதமாக செய்து  வருகிறது. இதில், சிவசேனா மூத்தத் தலைவரும், மகாராஷ்டிரா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலை மையில் இதுவரை 38 எம்எல்ஏ-க்கள்,  பாஜகவின் சதிக்கு பலியாகியுள்ளனர். அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ரேடிசன் புளூ சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள், ‘சிவசேனா  (பாலா சாஹேப்)’ என்ற பெயரில் இயங்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, சனிக்கிழமை யன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ தீபக் கேசர்கார், “தங்கள் கோஷ்டிக்கு ‘சிவ சேனா பாலாசாஹேப்’ என பெயரிடப்பட்டு உள்ளது” என்று தெரிவித் தார். எனினும்  “தாங்கள் எந்த கட்சியோடும் இணைய  மாட்டோம்” என்றும் கூறினார்.

உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

ஆனால், இந்தப் பெயருக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, உடனடியாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.  “என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், சிவசேனாவின் பெயரையும் பாலாசாகேப் தாக்கரேவின் பெயரையும் பயன்படுத்தாதீர்கள்” என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏ-க்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  மறுபுறத்தில், சட்டப்பேரவைத் தலைவரி டமிருந்து சட்டப்பூர்வ ஒப்புதல் பெறாத வரை, இதுமாதிரியான பிரிவுகள் அங்கீக ரிக்கப்படாது என காங்கிரஸ் கட்சியின் தலை வர் அசோக் சவான் தெரிவித்தார். ஆனால், தனியார் ஊடகத்துக்கு பேட்டி யளித்த ஏக்நாத் ஷிண்டே, “நாங்கள் பாலா சாஹேபின் சிவ சைனிகர்கள். தனி அணியை உருவாக்க நாங்கள் எந்த முயற்சியும் எடுக்க வில்லை” என்று பின்வாங்கினார்.

16 எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ்

எனினும், அதிருப்தி குழுவில் உள்ள  சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கு “உங்களை ஏன் தகுதி நீக்கம் செய் யக்கூடாது” என விளக்கம் கேட்டும், இதற்கு  27- ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிவ சேனா தலைமை நோட்டீஸ் அனுப்பியது

தானாஜி அலுவலகம் சூறை

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள அதிருப்தி எம்எல்ஏ தானாஜி சாவந்த் அலுவலகத்தை சிவசேனை தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடி னர். அத்துடன் அதிருப்தி எம்எல்ஏ-க்களை மும்பைக்குள் நுழைய விடாமல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

144 தடை உத்தரவு

இதனால், தானே மற்றும் மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தானேவில் ஜூன் 30 வரை அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றுக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வா கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையி லும் ஜூலை 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு விலக்கப்பட்டதா?

முன்னதாக அசாமில் முகாமிட்டுள்ள சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.  அதில், தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகா ராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டதாகவும், பழிவாங்கும் விதமாக சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அரசின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடு பட்டு இருக்கும் நிலையில் தங்கள் குடும் பங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்க ரேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சஞ்சய் ராவத் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுமே காரணம் என்றும் தெரி வித்து இருக்கின்றனர்.




 

;