tamilnadu

img

நிறுத்தப்பட்ட அனைத்து கல்வி உதவித் தொகைகளையும் திரும்ப வழங்கிடுக!

நாகர்கோவில், அக். 1- பெண் கல்வியை பாதுகாத்திடவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதி ரான முழக்கத்துடனும் இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் மாநில மாநாடு நாகர்கோவில் புனித சவேரியார் பொறி யியல் கல்லூரி அரங்கத்தில் அக்டோபர் 1 (ஞாயிறன்று) நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக சுங்கான்கடை பகுதியில் சங்க கொடியை அகில இந்திய துணைத் தலைவர் தீப்சிதா  தர் ஏற்றினார். தொடர்ந்து அங்கிருந்து அரங்கம் நோக்கிய மாணவிகளின் எழுச்சி மிகு பேரணி நடந்தது. பேரணியை சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் தீப்சிதா தர் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களில் ஒருவரான ப.இந்திரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் கே.எஸ்.பாரதி, மாணவர் சங்க முன் னாள் மத்தியக்குழு உறுப்பினர் முனை வர். ம. ஜாஸ்பின் வினோஜா ஆகியோர் கருத்துரையாற்றினர். அகில இந்திய துணைத் தலைவர் ஆர்ஷத் வாழ்த்திப் பேசினார்.  பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களை முறையாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தர வின்படி விசாகா கமிட்டி அமைத்திடவும், ICC (Intermal Complaint Committee) அனைத்து கல்வி வளாகங்களிலும் அமைத்திடவும் கல்வி வளாகங்களில் முறையீடு செய்ய வேண்டும். GSCHASH  கமிட்டி - ஆண்-பெண் நட்புறவு குழுக்களை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்த வலியுறுத்த வேண்டும். போக்சோ வழக்குகளை 3 மாதத்திற் குள் விசாரித்து குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கிட காவல் மற்றும் நீதிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட அனைத்து கல்வி உதவித் தொகை களையும் திரும்ப வழங்கிட வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்  உயர்கல்வி உறுதித் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கும் வழங்கிட வேண்டும். நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் பெண் களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திட வேண்டும். பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்பாக அரசும், கல்வித் துறையும் தனிக்கவ னம் செலுத்த வேண்டும் என்பன உள்ளி ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் நிருபன் சக்கர வர்த்தி, மாவட்ட செயலாளர் க.முகமது மூபிஸ், மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பி.குயிலி ஆகியோர் பேசினர். மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.