இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
கரூர், செப்.10 - கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்க ளின் குறைகளை தீர்க்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நடத்தப் பட்டு வருகிறது. செப்.11 அன்று கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.6,10-க்கு வெங்க மேடு முத்து மஹாலிலும், கடவூர் வட்டாரத்தில், முள்ளிப்பாடி மற்றும் பால விடுதி ஆகிய ஊராட்சி களுக்கு பாலவிடுதி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும், ‘உங்களு டன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளார்.
மரக்கன்றுகள் வழங்கல்
பாபநாசம், செப்.10 - காலநிலை மாற்றத் திற்கு எதிராக மாணவர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கோபு ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி யில் பயிலும் மாணவர் களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து 150 மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேந்திரநாத் பெற்றோர் களிடம் வழங்கினார். இதில் ஆசிரியைகள் மகேஸ் வரி, கவிதா உட்பட மாண வர்கள் பங்கேற்றனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், செப்.10 - தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனை கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத் தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத் தைச் சேர்ந்த 320 விவ சாயிகள், 49.725 மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். கும்ப கோணம், செம்பனார்கோ வில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணி கர்கள் பருத்தி மறைமுக ஏலத்தில் பங்கேற்று பருத் திக்கு அதிகபட்சம் ரூ.7,812, குறைந்தபட்சம் ரூ.6, 699, சராசரி ரூ. 7,229 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூ.35.80 லட்சம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
அரியலூர், செப்.10 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் சாலை யில் காந்தி பூங்கா எதிரே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் செப்டிக் டேங் கில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி துர் நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் வியாபாரிகளும், பாதசாரி களும் பொதுமக்களும் துர்நாற்றம் தாங்க முடி யாமல் அவதிப்படுகின்ற னர். மேலும் சாலையில் தேங்கி நிற்கும் செப்டிக் டேங்க் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மென வி