tamilnadu

img

வைக்கோல், தேங்காய் மட்டையை பயன்படுத்தி கயிறு, காகித ஆலைகள் ஏற்படுத்திடுக! திருவாரூர் சிஐடியு மாநாடு வலியுறுத்தல்

வைக்கோல், தேங்காய் மட்டையை பயன்படுத்தி  கயிறு, காகித ஆலைகள் ஏற்படுத்திடுக! திருவாரூர் சிஐடியு மாநாடு வலியுறுத்தல்

திருவாரூர், செப். 25-  திருவாரூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையத்தின் 10 ஆவது மாவட்ட மாநாடு குடவாசல் ஜிடி மகாலில் தோழர் ஆர். மோகன் நினைவரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரெகுபதி ஏற்றினார். மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா தலைமை வகித்தார். வரவேற்பு குழுத் தலைவர் ஜி. சுந்தரமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.  மாவட்ட துணைத் தலைவர் சீனி.மணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  மாநிலச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரா.மாலதி வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில துணைத் தலைவர் பி. சிங்காரன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவராக கே.பி.ஜோதிபாசு, மாவட்டச் செயலாளராக எம்.கே.என். அனிபா, மாவட்டப் பொருளாளராக கே. கஜேந்திரன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனார். கோரிக்கைககள் திருவாரூர் மாவட்டத்தில் கிடைக்கக் கூடிய வைக்கோல் மற்றும் தேங்காய்  மட்டையை பயன்படுத்தி கயிறு மற்றும் காகித ஆலைகள் உள்ளிட்ட பல தொழில் வளங்களை உருவாக்கிட வேண்டும். கட்டுமானம், சுமைப்பணி, ஆட்டோ, உள்ளாட்சி, தையல் சாலை போக்குவரத்து, சாலையோர வியாபாரம், சலவை, முடி திருத்துவோர் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களை பாதுகாக்க தொழிலாளர் நலவாரிய பணப் பயன்களை இரட்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக, குடவாசல் ஒகை ஆற்றுப்பாலத்தில் இருந்து 300-க்கும் தொழிலாளர் கலந்துகொண்ட எழுச்சி மிக்க பேரணி பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிவாசல் வழியாக கோரிக்கைகளை முழக்கமிட்டு மாநாட்டு அரங்கை சென்றடைந்தது.