சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிலையம் அமைத்திடுக
வாலிபர் சங்க வடசென்னை மாவட்ட மாநாடு அரசுக்கு கோரிக்கை
சென்னை, ஆக. 10- சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நிலை யம் அமைக்க வேண்டும் என வாலிபர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட சென்னை மாவட்ட 20ஆவது மாநாடு ஓட்டேரியில் தோழர் நெல்லை அசோக் நினைவரங்கில் ஞாயிறன்று (ஆக. 10) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆர்.அபிராமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். துணைச் செயலாளர் செ.கார்த்திக் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஜி.நித்தியராஜ் வேலை அறிக்கையையும், பொருளாளர் அ.விஜய் வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். எழுத்தாளர் இ.பா.சிந்தன், மாநில செயற்குழு உறுப்பி னர் மதன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க.அகல்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வரவேற்புக் குழு தலைவர் பா.தேவி வரவேற்றார். வரவேற்புக் குழு செயலாளர் கு.சுரேஷ் குமார் நன்றி கூறினார். தீர்மானங்கள் வடசென்னையில் சட்டமன்ற தொகுதிக்கு 2விளையாட்டு மைதா னங்கள் உடற்பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட அனைத்து உப கரணங்களுடன் அமைக்க வேண்டும், விம்கோ நகர் முதல் எண்ணூர் வரை, மாதவரம் முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கம் செல்லும் புறநகர் ரயில் வழித்தடத்தில் கூடுதலாக 2 வழித்தடங்கள் அமைத்து விரிவுப்படுத்த வேண்டும், வடசென்னைக்கு என்று தனி சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்க வேண்டும், கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் அமையவுள்ள எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும், வட சென்னையில் இரண்டு தணிக்கையாளர் பொறியி யல் கல்லூரிகளை அமைக்க வேண்டும். சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிலையங்க ளையும், அரசு போட்டித் தேர்வுகளில் இளைஞர்கள் தயாராகும் வகையில் தனி பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும், தற்போது உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய மருத்துவமனையை உரு வாக்க வேண்டும். இ- பேருந்துகளை தனியாரிடம் வழங்கி இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக அ.விஜய், செயலாளராக ஜி.நித்திய ராஜ், பொருளாளராக ஆர்.ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வுசெய்யப்பட்டது.