tamilnadu

img

பட்டுவளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

பட்டுவளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 15– பட்டு வளர்ச்சித்துறையில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை கையப் படுத்தியதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை தொழில் வணிக துறையிலிருந்து 1979 ஆம் ஆண்டு முதல் தனித்துறையாக செயல்பட்டு வருகி றது. சிறு/குறு விவசாயிகள். பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. பட்டு வளர்ச்சிச் துறையின் அடிப்படை பணிகளான மல்பெரி நாற்று உற்பத்தி, விதை பட்டுக்கூடு உற்பத்தி. பட்டு விவசாயிகளுக்குகான பயிற்சி வழங்கு தல். இளம்புழு வளர்ப்பு ஆகிய பணிகள் பட் டுப்பண்ணையால் செயல்படுத்தப்பட்டு விவ சாயிகளுக்கு குறைந்த விலையில் தரமான சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டு வளர்ச்சிக்கு சொந்தமான நிலங்களை மற்ற துறைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஊத்தங்கரை பட்டுப்பண்ணையில் இருந்து 1.50 ஏக்கர் நிலத்தை பிற துறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. குன் னூரில் 6.00 ஏக்கர் நிலம் பிறத்துறை பயன் பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்பொ ழுது மாதஹள்ளி பட்டுப் பண்ணையிலிருந்து 744 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை எடுத்து வைத்துள்ளது. தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை நிர் வாகம் பட்டு வளர்ச்சித்துறைக்கு சொந்த மான நிலங்களை பாதுகாப்பதோடு மட்டுமல் லாமல் புதிய திட்டங்களை வகுத்து போதிய  நிதி ஒதுக்கீடு செய்து அந்நிலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை பிற பயன்பாட்டிற்கு கைய கப்படுத்தியதை ரத்து செய்ய வேண்டு மென வலியுறுத்தி தருமபுரி அரசு பட்டுகூடு அங்காடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் வினயா தலைமை வகித்தார்.  மாநிலப் பொருளாளர் கல்யாணசுந்த ரம், வட்டச் செயலாளர் ஸ்ரீநாத் ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ஆர். மீன்முருகன், வேளாண்மைதுறை அமைச்சு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்  ஜெயவேல், அனைத்து துறைகளிலும் ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பெரு மாள், நிர்வாகிகள் சி.காவேரி, கேசவன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.