மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்துக்கு அகவை 90
மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வெள்ளியன்று தமது 90வது அகவையை அடியெடுத்து வைத்தார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொலைபேசி மூலம் தமது வாழ்த்தை தெரிவித்தார்.
