tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் நா.கண்ணையன் காலமானார்

சிபிஎம் மூத்த தோழர் நா.கண்ணையன் காலமானார்

திருவாரூர், ஆக 1-  குடவாசல் பிடாரி கோவில் தெருவில் வசிக்கும் சிபிஎம் உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினருமான மூத்த தோழர் நா.கண்ணையன்(81) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர், தோழர் நா.கண்ணையன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடந்து, நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். லெட்சுமி மற்றும் மாதர் சங்கம், விச, விதொச உள்ளிட்ட வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள், தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.  அன்னாரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.