tamilnadu

புகையிலை பண்டல்கள் பறிமுதல்

விருதுநகர், ஏப்.1- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட ரூ.45 ஆயிரம் மதிப்பிலான புகை யிலை பண்டல்கள் பறி முதல் செய்யப்பட்டன. இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜ குலராமன் காவல் நிலை யத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் ஆலங்குளம் -இராஜ பாளையம் சாலையில் உள்ள நத்தம்பட்டி விலக்கு அருகே வாகன சோதனை மேற் கொண்டனர்.  அப்போது அவ்வழியே வந்த சிறிய காரை நிறுத்தி சோதனையிட்டனர். காவல் துறையினரை கண்டதும், காரை நிறுத்தி விட்டு, ஓட்டு நர் தப்பியோடி விட்டார். பின்பு, காரை  சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.44368 ஆகும். இதை யடுத்து காவல்துறையினர் புகையிலை மற்றும் காரை பறிமுதல் செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.