கோழிக்கோடு, செப். 24 - கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பதால், கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இந்நிலையில், 10 நாட்களாக விடுமுறையில் இருந்த கல்வி நிலையங்களை திங்களன்று மீண்டும் திறக்க கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் கல்வி நிலையங்களுக்கு முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.