பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்
பாபநாசம், ஜூலை 30 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு பள்ளித் தலை மையாசிரியர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி, துணைத் தலைவி செல்வி, உறுப்பி னர்கள், கவுன்சிலர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளியில் கூடுதல் மாண வர்களை சேர்த்தல், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், விளை யாட்டில் ஆர்வமுள்ள மாண வர்களை உருவாக்குதல், மாணவர்களை வங்கிக் கணக்கில் சேமிக்கத் தூண்டு தல் உள்ளிட்டத் தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
சாலைகளை சீரமைக்க கோரிக்கை
பாபநாசம்: கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டை பேரூராட்சியில், பெரிய தைக்கால் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தத் தெருவில் சாலை அமைத்து 15 வருடங்களாகின்றன. இந்தச் சாலை குண்டும், குழியுமாக பயனற்ற நிலையில் உள்ளது. மழை நாட்களில் சாலையில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் வாய்ப்புள்ளது. இந்த சாலை மட்டுமல்ல, அய்யம்பேட்டை பேரூராட்சியிலுள்ள பல சாலைகள் இதே நிலையில் இருப்பதால், அதனை விரைந்து சீரமைக்க அய்யம்பேட்டை பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.