சமையல் எரிவாயு விலை குறைப்புக்கு பின்னால் உள்ள மோசடியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தபோது சமயல் எரிவாயு விலை ரூ.410 ஆக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில், சமையல் எரிவாயு விலை சுமார் 300% உயர்ந்தது. நாட்டு மக்களுக்கு தேவையான சமையல் எரிவாயு 47% இந்தியாவில் உற்பத்தியாகிறது. 53% இறக்குமதி செய்கிறோம். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை விட நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயு விலை மிகவும் குறைவு. ஆனால் ஒன்றிய பாஜக அரசு சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை என்னவோ அதைத்தான், உள்நாட்டில் உற்பத்தியாகும் எரி வாயுவுக்கும் தீர்மானிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை சர்வதேச சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு (import parity price) விற்பனை செய்கிறார் கள். இது நம் நாட்டு மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகமும் வஞ்சகமும் மோசடி யும் ஆகும்.
ஜி.ராமகிருஷ்ணன்