tamilnadu

சாத்தான்குளம் படுகொலை மூன்று பேரை விசாரிக்க சிபிஐ முடிவு

மதுரை, ஜூலை 20- தூத்துக்குடி மாவட்டம் சாத் தான்குளத்தைச் சேர்ந்த தந்தை- மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறை யினர் விசாரணையின் பேரில் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற் போது இந்த வழக்கை சிபிஐ விசா ரித்து வருகிறது. அதன்படி, ஜெயராஜ், பென்னிக் ஸின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத் தப்பட்டது. சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலை யத்தில் பணியில் இருந்த அனை த்து காவல்துறையினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் மூன்று காவல்துறையி னரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை நீதிமன்றத் தில் சிபிஐ. அதிகாரிகள் மனுத்தாக் கல் செய்தனர். காவலர்கள் வெயில்முத்து, சாமதுரை, செல்லதுரை ஆகியோரை ஐந்து நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட காவலர்கள் 3  பேரையும் திங்களன்று நீதிமன்றத் தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்த ரவிட்டனர். இதனை தொடர்ந்து தற்போது காவலர்கள் மூன்று பேரையும் வரும் 23-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

;