tamilnadu

img

குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

திருப்பூர், செப்.8- காளிவேலம்பட்டி கிரா மத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க கோரி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஒன்றியம் சுக் கம்பாளையம் பஞ்சாயத் திற்கு உட்பட்ட காளிவேலம் பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடி நீர் குழாய் உடைந்து சாலையில் செல்கிறது.  ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்  சீரமைக்கக் கோரி சுக்கம்பாளையம் வாலிபர்  சங்க கிளைச் செயலாளர் விமல் தலைமை யில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில், ஒன்றியத் தலைவர் சி. முருகேஷ் போராட்ட நோக்கத்தை விளக்கிப்  பேசினார். ஒன்றியச் செயலாளர் பிரவீன் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் கே.ஆர்.நாகராஜ், மாதர்  சங்க நிர்வாகி பரிமளா, உட்பட பொதுமக் கள் திரளாக பங்கெடுத்தனர்.