tamilnadu

img

காவல்துறை, வருவாய்த்துறைக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்காது... உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை:
சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறைக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கள்ளிடைக்குறிச்சியில் உள்ள ஓடைத்தடுப்பணையில் மணல் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்புசெவ்வாயக்கிழமையன்று விசாரணை நடைபெற்றது. அப்போது,  “சம்பந்தப்பட்டபகுதி காவல்துறையினர், வருவாய்த்துறையினருக்குத் தெரியாமல் மணல் கடத்தல்நடக்க வாய்ப்பில்லை” எனத்தெரிவித்தது.

மேலும், “அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை.இந்த மணல் கடத்தலால் நிலத்தடி நீா் ஆதாரம் அழிக்கப்படுகின்றன” எனக் கவலை தெரிவித்தனர். மணல் கடத்தல் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக மணல் கடத்தல்வழக்குகளில் சிக்குவோருக்கு இனிமுன்ஜாமீன் கிடையாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்தலுக்கு எதிராக சிபிஎம் போராட்டம்
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. இந்தப் பிரச்சனையில் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை மாற்றம் செய்து வேறொருஅதிகாரியை நியமித்து மணல் கடத்தல், மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது இங்கு நினைவுகூரத்தக்கது.

;