tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே நடவடிக்கை!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
திருச்செந்தூர்- திருநெல்வேலி; மதுரை- செங்கோட்டை; திருநெல்வேலி- செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பயணி வண்டிகள் மீண்டும் ஜூலை 1 முதல் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரவேற்கிறேன்!
மேலே குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடிக்கொண்டிருந்த சாதாரண பயணி வண்டிகள் கொரோனாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. அவற்றை மீண்டும் இயக்க நான் வலியுறுத்தி வந்தேன். 
இப்போது அவற்றை முன்பதிவில்லா விரைவு வண்டிகள் ஆக இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் இவற்றை சாதாரண கட்டணத்தில் ஆன சாதாரண பயணி வண்டிகள் ஆக இயக்க வேண்டும் என்ற என் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.