tamilnadu

img

மோடியை அழைத்து வாருங்கள், நாங்கள் அவரிடம் கேட்க விரும்புகிறோம்

பாலக்காடு, ஜுலை 4- ‘அதிகாலையில் பணியிடத்தை அடைந்து புகைப்படம் எடுத்து மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் வரவில்லை என்றால் வேலையை இழக்க நேரிடும். மோடியை எங்கள்  முன்னால் நிறுத்துங்கள். எதற்காக இப்படி அவதிக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அவரிடம் கேட்க விரும்புகிறோம்’. இது அட்டப்பாடி சோலையூர் வட்டலாக்கியில் மகாத்மா காந்தி ஊரக  வேலை உறுதி திட்டத்தில் வேலைசெய் யும் தொழிலாளர்கள் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்திடம் கூறிய வார்த்தைகள்.  காட்டுக்குள் வேலை செய்துகொண் டிருந்த தொழிலாளர்களின் பிரச்சனை களை நேரில் கேட்டறிய வந்திருந்தார் பிருந்தா காரத். இதுகுறித்து ஒன்றிய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்தார். பக்கவாட்டுச் சுவர் அமைப்ப தற்காக, அருகில் உள்ள ஓடையில் இருந்து கற்களை உடைத்து, கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு தொழி லாளர்கள் கொண்டு வருகின்றனர். உடல் வலு உள்ள ஆண்கள் செய்யும் இந்த வேலையை பெண்களே செய் கிறார்கள். பெண்கள் தங்களால் இயன் றதை விட அதிகமாக வேலை செய்வ தாக பிருந்தா காரத் குறிப்பிட்டார். சுவர் கட்டும் கொத்தனாராக பணிபுரி யும் பொன்னியை பிருந்தா பாராட்டி னார். கடந்த நிதியாண்டில் சிந்தக்கிதி யில் மூன்று குடும்பங்கள் 200 நாட்களை  நிறைவு செய்தன. மற்றவர்களுக்கு 70 முதல் 100 வேலை நாட்கள் கிடைத்தன. அட்டப்பாடியில் உள்ள சோலையூர் மற்றும் அகளி ஊராட்சிக்குட்பட்ட வத்தலக்கி, சிந்தக்கி கிராமங்களில் பணி புரியும் தொழிலாளர்களை பிருந்தா காரத் சந்தித்தார்.

பின்னர் பிருந்தா காரத் அளித்த பேட்டியில் கூறியதாவது:  நாட்டில் உள்ள ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை எப்படி பாது காப்பது என்பதற்கு கேரளா ஒரு உதாரணம். பழங்குடியினர் உட்பட வேலை நாட்கள், ஊதியம் மற்றும்  அரசின் பிற சலுகைகள் துல்லியமாகக் கிடைத்து வருகின்றன. கேரளாவில் அதிக வேலை நாட்கள் வழங்கப்படு வது ஒரு சாதனையாகும். தொழிலாளர் வருகை தொடர்பான பிரச்சனை மிகப் பெரியது. பணியிடத்தில் அதிகாலை யில் தோன்றி புகைப்படம் எடுக்கும் திட்டம் பெண் தொழிலாளர்களுக்கு கொடுமையானது என்று பிருந்தா கூறினார்.  சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி, சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் எம்.பத்மினி, சிபிஐஎம் பகுதி செயலாளர் சி.பி.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;