ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க அமைப்பு தின ரத்ததான முகாம்
சேலம், செப்.27- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தின் அமைப்பு தின ரத்ததான முகாம், சேலம் மாவட் டம், ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள நேசகரங் கள் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங் கத்தின் 39 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் சனியன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா.செந்தில் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜான் ஆஸ்டின் வரவேற்றார். முகாமினை ஊடக வளர்ச்சி ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் இரா. சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பேசினர். மாநில துணைத்தலைவர் ந.திரு வேரங்கன் நிறைவுறையாற்றினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட இணை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் குருதி தானம் வழங்கி னர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் எஸ். வடி வேல் நன்றி கூறினார்.
