tamilnadu

img

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம் 

திருச்சிராப்பள்ளி, ஆக. 9-  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள தினக்கூலி ரூ.722 வழங்க வேண்டும். ஓட்டுந ராக பணிபுரிபவர்களுக்கு ரூ.802 சம்பளம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர், சிஐடியு  திருச்சி புறநகர் மாவட்ட சங்கம் சார்பில், வெள்ளி அன்று திருச்சி லால்குடி நகராட்சி  அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு லால்குடி கிளை தலை வர் செல்வகுமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர்  மாவட்டச் செயலாளர் சம்பத், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்டச் செய லாளர் பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாலமுரு கன், லால்குடி நகராட்சி சங்க கிளைச் செயலாளர் மகாமணி ஆகியோர் பேசினர். கிளை பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர், தினக்கூலி ரூ.722   வழங்க  உத்தரவிட்டால் வழங்குகிறோம். பிஎப்,  இஎஸ்ஐ பிடித்தம் செய்வதில் உள்ள குளறு படிகளை நீக்கி, பட்டியல் கொடுக்கப்படும். உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.